TNPSC Thervupettagam

நிலக்கரியிலிருந்து எரிவாயு மாற்றும் இந்தியாவின் முதல் தொழிற்சாலை

January 14 , 2018 2509 days 795 0
  • இயற்கை எரிவாயு பகிர்மான மற்றும் விநியோக நிறுவனமான கெயில் இந்தியா (Gas Authority of India Limited - GAIL) நிறுவனம் ஒடிசாவில் நிலக்கரியை செயற்கை எரிவாயுவிற்கு மாற்றும் இந்தியாவின் முதல் தொழிற்சாலையை (coal-to-synthetic gas conversion plant) ஆரம்பிக்க உள்ளது.
  • இந்த செயற்கை எரிவாயு, இயற்கை எரிவாயுவை விட மலிவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கெயில் நிறுவனம் இந்த முயற்சிக்காக மற்ற பொதுத்துறை நிறுவனங்களான கோல் இந்தியா, ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் பெர்டிலைசர்ஸ் மற்றும் பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவற்றை இத்திட்டத்தில் இணைத்துள்ளது. இதில் பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் நிலக்கரியிலிருந்து அமோனியா வாயுவை தயாரிக்கும்.
  • இந்த துறைக்காக முதலீடுகள், ஊக்கத் தொகைகள் மற்றும் அதிகபட்ச உத்தரவாதத் தொகை போன்ற விஷயங்களுக்காக ஒரு புதிய உயிரி எரிபொருள் கொள்கை விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்