TNPSC Thervupettagam

நிலச்சரிவைத் தடுக்கப் பசுமைத் தீர்வு

May 17 , 2024 191 days 251 0
  • மாநில நெடுஞ்சாலைத் துறையானது, நீலகிரியின் முக்கிய சாலைகளைச் சுற்றியுள்ள சரிவுகளில் மண் அரிப்பைத் தடுக்க, ஐந்து இடங்களில் புற்களை வளர்த்து அதை வளப் படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.
  • இந்தத் திட்டம், 'மண் இறுக்கமாக்கல் மற்றும் நீர்விதைப்பு முறையைப் பயன்படுத்திச் சரிவை நிலைப்படுத்தல்' என அழைக்கப்படுகிறது.
  • மண் இறுக்கமாக்குதல் என்பது ஒரு புவி தொழில்நுட்பப் பொறியியல் நுட்பமாகும், இது ஒரு குறிப்பிட்ட பகுதியில் வலுவூட்டும் கூறுகளை மண்ணிலிடுவதை உள்ளடக்கிய ஒரு தொழில்நுட்பமாகும்.
  • இந்தத் தொழில்நுட்ப முறையானது கேட்டி, கட்டபெட்டு, பேரார், குடா மற்றும் உதக மண்டலம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்த முறையானது நிலச்சரிவுகளைத் தடுத்து, நீலகிரியில் சாலைகள் போன்ற நேரான குறுகிய உள்கட்டமைப்புகளின் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்