TNPSC Thervupettagam

நிலச்சீரழிவுக் குறைப்பு மற்றும் பவளப் பாறைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான உலகளாவிய முன்னெடுப்பு

September 20 , 2020 1531 days 675 0
  • இது சமீபத்தில் நிகழ்ந்த ஜி20 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சரவைச் சந்திப்பின் போது தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தச் சந்திப்பின் கருத்துருவானது, அனைவருக்குமான 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணரச் செய்தல்என்பதாகும்.
  • இந்தச் சந்திப்பில், நிலச்சீரழிவைக் குறைப்பது மீதான உலகளாவிய முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
  • இது ஜி20 உறுப்பு நாடுகளுக்குள் மற்றும் உலகளாவிய அளவில் நிலச் சீரழிவைத் தடுத்தல், நிறுத்தி வைத்தல், மீட்டெடுத்தலுக்கான தற்பொழுதுள்ள கட்டமைப்புகளின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • மேலும், இதர நீடித்த வளர்ச்சி இலக்குகளின் சாதனைகள் மீதான தாக்கங்கள் தீங்கு இழைக்காத கொள்கை முடிவுகளைப் பின்பற்றுதல் ஆகியவையும் இதில் கருத்தில் கொள்ளப் படுகின்றது.
  • உலகளாவிய பவளப் பாறைகள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி விரைவுத் தளம் என்பது பவளப் பாறைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு வேண்டி ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னெடுப்பாகும்.

நிலச் சீரழிவு

  • நிலத்தின் உயிரியல் மற்றும் பொருளாதார உற்பத்தித் திறனின் குறைவு அல்லது இழப்பு என்பது மனித நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உள்ளிட்ட நிலப் பயன்பாடு அல்லது செயல்பாடு மற்றும் கூட்டுச் செயல்பாடுகளினால் ஏற்படுகின்றது.

பாலைவனமாதல்

  • இது முழுவதும் வறண்ட, பகுதியளவு வறண்ட மற்றும் வறண்ட துணை ஈரப்பதப் பகுதிகளில் நிலச் சீரழிவைக் குறிக்கின்றது.
  • பாலைவனமாதல் ஆனது தற்பொழுதுள்ள பாலைவனங்களின் விரிவாக்கத்தைக் குறிக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்