ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் கிழக்கு கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடு மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது.
ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் இந்த ஃப்ளூரைடு மாசுபாடு நிலவியது.
அதிகப்படியான ஃப்ளூரைடு அளவானது எலும்புப் புளூரின்மிகைமை (ஃப்ளோரோசிஸ்) போன்ற நோய் நிலைகளின் அபாயத்தை அதிகரிப்பதோடு பல் சிதைவு விகிதத்தைத் துரிதப்படுத்துகிறது.
தேசிய அளவில் அனுமதிக்கப்பட்ட ஃப்ளூரைடின் வரம்பு 1.50 மில்லிகிராம் / லிட்டர் ஆகும்.
ஒரு லிட்டருக்கு 1.50 மில்லிகிராம் அளவுக்கு மேல் மாசுபட்டால், அந்த நீர் குடிப்பதற்குத் தகுதியற்றதாகக் கருதப்படுகிறது.
வறண்ட, மேற்கு இந்தியப் பகுதிகளில் நிலத்தடி நீரில் ஃப்ளூரைடின் சராசரி செறிவு அதிகமாக இருந்தது.
இந்தத் தரவரிசையில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ள நிலையில் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய சில மாநிலங்களில் பருவமழைக்குப் பிந்தைய ஃப்ளூரின் செறிவு இயல்பை விட அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.