TNPSC Thervupettagam

நிலத்தடி நீர் குறித்த 7-ஆவது சர்வதேச மாநாடு

December 9 , 2017 2572 days 865 0
  • நிலத்தடி நீர் குறித்த 7 ஆவது சர்வதேச மாநாடு புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இவ்வருட மாநாட்டின் கருத்துரு: “நிலத்தடி நீர் குறித்த பார்வை 2030 – நீர்வள பாதுகாப்பு, சவால்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை பொருத்தமாக்கிக் கொள்ளுதல்”.
  • இம்மாநாட்டினை ஒருங்கிணைப்போர்,
    • தேசிய நீரியல் நிறுவனம் (National Institute of Hydrology)
    • மத்திய நிலத்தடிநீர் வாரியம் (Central Ground Water Board)
  • மத்திய நிலத்தடிநீர் வாரியம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த மாநாட்டில் நாட்டின் நிலத்தடிநீர் மேலாண்மையின் தற்போதைய சூழல் குறித்தும், வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
  • நாட்டில் மாறிவரும் நீர் உபயோகம் பற்றியும், பருவநிலைகள் பற்றியும் ஆராய இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்