நிலத்தடி நீர் குறித்த 7 ஆவது சர்வதேச மாநாடு புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இவ்வருட மாநாட்டின் கருத்துரு: “நிலத்தடி நீர் குறித்த பார்வை 2030 – நீர்வள பாதுகாப்பு, சவால்கள் மற்றும் காலநிலை மாற்றத்தை பொருத்தமாக்கிக் கொள்ளுதல்”.
இம்மாநாட்டினை ஒருங்கிணைப்போர்,
தேசிய நீரியல் நிறுவனம் (National Institute of Hydrology)
மத்திய நிலத்தடிநீர் வாரியம் (Central Ground Water Board)
மத்திய நிலத்தடிநீர் வாரியம் மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த மாநாட்டில் நாட்டின் நிலத்தடிநீர் மேலாண்மையின் தற்போதைய சூழல் குறித்தும், வருங்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.
நாட்டில் மாறிவரும் நீர் உபயோகம் பற்றியும், பருவநிலைகள் பற்றியும் ஆராய இருக்கிறது.