TNPSC Thervupettagam

நிலத்தடி நீர்ப்படுகை நிலை குறித்த ஆய்வு வரைபடம்

March 14 , 2025 19 days 81 0
  • நீர்வளத் துறை (WRD) ஆனது, வட தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் நிலத்தடி நீர்ப் படுகை நிலை குறித்த ஆய்வினைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • இந்த மாவட்டங்கள் ஆனது, முக்கியமான மற்றும் நிலத்தடி நீர் அதிகமாக வெளியில் எடுக்கப் படும் மாவட்டங்களின் கீழ் வருகின்றன.
  • வேலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள், நிலத்தடி நீர் மட்டத்தில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படும் மிக கடினமான பாறைப் பகுதிகள் என்பதால் இந்த ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • சராசரியாக, இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தொழில்துறை, வேளாண்மை மற்றும் வீட்டு உபயோக நோக்கங்களுக்காக சுமார் 3 லட்சம் நிலத்தடி நீர் அகழெடுப்பு கிணறுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்