TNPSC Thervupettagam

நிலத்தடி பனிக்கட்டி வரைபடமாக்கல் திட்டம்

November 6 , 2023 386 days 266 0
  • நாசாவின் நிதியுதவியுடன் கூடிய நிலத்தடிப் பனிக்கட்டி வரைபடமாக்கல் (SWIM) திட்டமானது, செவ்வாய் கிரகத்தில் நிலத்தடிப் பனிக்கட்டிகள் இருக்கும் தகவல் குறித்த அதன் நான்காவது மற்றும் மிக சமீபத்திய வரைபடத்தினை வெளியிட்டுள்ளது.
  • இந்த வரைபடம் ஆனது, செவ்வாய்க் கிரகத்தில் முதலில் மனிதர்களை எந்த இடத்தில் இறக்குவது என்பதைத் திட்டமிடும் நிறுவனங்களுக்கு அது குறித்து தீர்மானிக்க உதவும்.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காவது வரைபடத் தொகுப்பு ஆனது, 2017 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை வெளியிடப்பட்ட மிகவும் விரிவான மற்றும் துல்லியமானதாகும்.
  • இந்தப் புதிய வரைபடத்தில் "பல்கோண நிலப்பரப்பு" என்று அழைக்கப்படும் கட்டமைப்பின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
  • மேற்பரப்புப் பனிகளின் பருவகால விரிவு மற்றும் சுருக்கச் செயல்முறையானது, நிலப் பரப்பிற்கு அடியில் அதிகப் பனிக்கட்டிகள் மறைந்திருப்பதைக் குறிக்கும் வகையில் நிலத்தில் பல்கோண விரிசல்களை உருவாக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்