TNPSC Thervupettagam

நிலத்தினால் சூழப்பட்ட நாடுகளுக்கான 10 ஆண்டு கால செயல் திட்டம்

December 29 , 2024 24 days 85 0
  • நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் (LLDC) எதிர்கொள்ளும் பல்வேறு மிகப் பெரும் தனித்துவமானச் சவால்களை எதிர்கொள்வதற்காக 10 ஆண்டு காலச் செயல் திட்டத்தினை ஐக்கிய நாடுகள் பொது சபை (UNGA) ஏற்றுக் கொண்டுள்ளது.
  • இந்தத் தீர்மானம் ஆனது, நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கான 2024-2034 ஆகிய காலக் கட்டம் வரையிலான பத்தாண்டு காலச் செயல்திட்டம் என்ற தலைப்பில் முன் வைக்கப்பட்டது.
  • வியன்னா செயல் திட்டம் (2014-2024) & அல்மாட்டி செயல் திட்டம் (2003) ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • 2034 ஆம் ஆண்டிற்குள் அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர் உற்பத்தித்திறன் மற்றும் வேலை வாய்ப்புகளை 50% உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பேரிடர் இடர் குறைப்பு 2015- 2030 காலக் கட்டத்திற்கான செண்டாய் கட்டமைப்பை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் LLDC நாடுகளில் பேரழிவு அபாயத்தைக் குறைப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது.
  • நிலத்தினால் சூழப்பட்ட நாடுகள் என்பவை கடலுக்கான நேரடி அணுகல் இல்லாத நாடுகள் ஆகும்.
  • சுமார் 570 மில்லியன் மக்கள்தொகை கொண்ட, 32 நிலத்தினால் சூழப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்