TNPSC Thervupettagam

நிலநடுக்க முன் எச்சரிக்கை அமைப்பு

October 3 , 2023 293 days 231 0
  • ஒரு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பற்றி பயனர்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கைகளை வழங்கச் செய்வதற்காக, ஆண்ட்ராய்டு நிலநடுக்க முன் எச்சரிக்கை அமைப்பினை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது.
  • இது முன் எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்குவதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் தேசிய நில அதிர்வு ஆய்வியல் மையம் (NSC) ஆகியவற்றின் ஆலோசனையினைப் பெற்றுள்ளது.
  • ஏற்கனவே ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளிலும் இந்த முன் எச்சரிக்கை வசதி கிடைக்கப் பெறும்.
  • ஆண்ட்ராய்டு திறன் பேசிகளின் முடுக்கமானிகள் "ஒரு சிறிய நில அதிர்வு மானியாக" செயல்படும்.
  • கைபேசி மின்னேற்றம் செய்யப்படும் போது நிலநடுக்கத்தின் ஆரம்பத்தினை இதன் மூலம் கண்டறிய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்