பூமியின் புவி காந்த நிலநடுக் கோட்டு ரேகையானது இந்தியாவின் தென் முனைக்கு மிக அருகில் செல்கிறது.
நிலநடுக்கோட்டு மின்னோட்டம் (EEJ) எனப்படும் 100 kA வரிசையின் தனித்துவமான மற்றும் மிகவும் வலுவான மின்னோட்டம் ஒன்று உள்ளது.
இது மேல் மட்ட வளிமண்டலத்தில் சுமார் 105-110 கிமீ உயரத்தில் பாய்கிறது.
இந்தத் தீவிர மின்னோட்டப் பாய்வு காரணமாக, நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள புவி காந்தப்புலம் ஆனது சில பத்துகள் முதல் சில நூறு நானோ டெஸ்லாக்கள் (nT) அளவிற்கு மேம்படுத்தப்படுகிறது.
புவி காந்தப்புல மேம்பாட்டின் மூலம் இந்த மின்னோட்டத்தின் தீவிரத்தை அளவிடுவது அயனி மண்டல மின்புலத்தின் மாறுபாட்டைப் பற்றிய மிகவும் முக்கியமான புரிதலை வழங்குகிறது.
நவி மும்பையில் உள்ள இந்தியப் புவி காந்தப் புல கல்வி நிறுவனத்தின் (IIG) அறிவியல் ஆய்வாளர்கள் EEJ மின்னோட்டத்தை மிகத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய செயலறிவு மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள், உலகளாவிய வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பின் (GNSS) அடிப்படையிலான வழிகாட்டுதல் / நிலைப்படுத்தல் மற்றும் பல்வேறு இன்ன பிற செயற்கைக் கோள் தொடர்பு இணைப்புகள் மற்றும் மின்னாற்றல் கட்டமைப்புகளில் EEJ பாய்வின் தாக்கத்தை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.