விக்ரம் தரையிறங்கு கலம் அனுப்பிய ஒரு உலாவிக் கலமான பிரக்யான் தரவைப் பயன்படுத்தி நிலவின் தென் துருவப் பகுதியின் முதல் மிகவும் விரிவான புவியியல் வரைபடத்தினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
நிலவில் உருகிய பாறை அல்லது ஆதிகாலப் பாறைக் குழம்புகள் நிரம்பிய நிலத்தடி பரப்பு உள்ளது.
பூமியுடனான நிலவின் புவி வேதியியல் சார் ஒற்றுமைகள் ஆனது, அந்த இரண்டு அமைப்புகளும் ஒரே உருகியப் பொருளிலிருந்து தோன்றின என்ற ஒரு கோட்பாட்டை ஆதரிக்கின்றன.
இது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கும் செவ்வாய் கிரக அளவிலான அமைப்பிற்கும் இடையிலான ஒரு பெரிய மோதலின் காரணமாக இருக்கலாம்.
வளிமண்டல அரிப்பு இல்லாததால் நிலவின் பள்ளங்கள் சில பில்லியன் கணக்கான ஆண்டுகளாக அப்படியே நிலைத்துள்ளன.
விக்ரம் கலமானது, ஒரு பழங்கால, ஒரு மோதலால் உருவான சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய தாக்கப் பள்ளத்திற்கு தென் துருவ-ஐட்கென் படுகைக்கு அருகில் தரை இறங்கியது.