அறிவியலாளர்கள் முதல் முறையாக நிலவின் மண்ணில் தாவரங்களை வளர்த்து உள்ளனர்.
இது மனித வரலாற்றிலும் சந்திர மற்றும் விண்வெளி ஆய்விலும் ஒரு புதிய சாதனை ஆகும்.
இது வருங்காலத்தில், நிலவில் அல்லது விண்வெளிப் பயணங்களின் போது உணவு மற்றும் ஆக்ஸிஜனுக்காக தாவரங்களை வளர்ப்பதற்கான முதல் படியாகும்.
நிலவுக்கு அனுப்பப்பட்ட அப்பல்லோ 11, 12 மற்றும் 17 ஆகிய ஆய்வுக்கலங்களின் மூலம் 12 கிராம் அல்லது சில தேக்கரண்டி அளவில் நிலவிலிருந்து மண் சேகரிக்கப் பட்டது.