சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் இதுவரை ஆராயப்படாத தென் துருவத்தில் விண்கலத்தை மிதமான வேகத்தில் தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டு ஏவப் பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி என்ற கிராமத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக தென் துருவத்தில் உள்ள மண்ணுடன் மிகவும் ஒத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம் சேகரிக்கப் பட்ட மண்ணுடன் ஒப்பிட்டுச் சோதனைகளை மேற்கொள்வதற்காக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இஸ்ரோவுக்கு அதன் மண் மாதிரிகளை அனுப்பியது.