நிலவின் ஒரு புதிய புவியியல் வரைபடத்தைச் சீனா வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட வரைபடம் மற்றும், இன்று வரையில் வெளியான இதரவற்றையும் விட நிலவின் மேற்பரப்பின் மிக நுணுக்கமான விவரங்களைப் பதிவு செய்து வெளியிட்ட மிகவும் விரிவான வரைபடம் இதுவாகும்.
இதற்கு முன் கண்டறியப்படாத பள்ளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் அனைத்து விவரங்களைக் கொண்ட இந்தப் புதிய வரைபடமானது, நிலவினைக் குறித்த எதிர்கால ஆராய்ச்சிக்கு உதவும்.
அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வு மற்றும் நிலவில் தரை இறங்கும் தளத் தேர்வுக்கு இது உதவும்.