அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம் தனது பிக் பால்கன் ராக்கெட் ஏவு வாகனத்தின் மூலம் நிலவிற்கு மனிதனைக் கொண்டு செல்லும் உலகின் முதலாவது தனியார் பயணிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கின்றது.
ஸ்பேஸ் எக்ஸின் லூனார் (BFR - Big Falcon Rocket) திட்டத்திற்கான நிலவின் முதல் பயணியாக ஜப்பானிய கோடீஸ்வரரும் அழகியல் சாதனங்களுக்கான நேரடி இணையதள வல்லுநரும் ஜோஜோ என்ற நிறுவனத்தை நிறுவியவருமான யுசாகு மேசாவா என்பவர் இருப்பார்.
1972 ஆம் ஆண்டின் அமெரிக்காவின் அப்போலோ திட்டத்திற்குப் பிறகிலிருந்து 42 வயதான மேசாவா என்பவரே நிலவிற்கான முதல் பிரயாணி ஆவார்.
BFR திட்டம் 2016 ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டு, வரலாற்றில் மிகுந்த சக்திவாய்ந்த ராக்கெட் திட்டம் என புகழப்படுகிறது.