TNPSC Thervupettagam

நிலவிற்கான விண்வெளி நிலையம் - நாசா

April 1 , 2024 109 days 234 0
  • நாசா நிறுவனம் ஆனது, சர்வதேச மற்றும் தனியார் பங்குதாரர்கள் குழுவுடன் இணைந்து, நிலவிற்கான (லூனார் கேட்வே) விண்வெளி நிலையம் எனப்படும் சிறிய விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
  • தற்போதைய திட்டம் ஆனது, இந்த நிலையத்தினை இரு வெவ்வேறு வளைவுகள் கொண்ட நேர்கோட்டு வகையிலான ஒளிவட்ட சுற்றுப் பாதையில் (NRHO) நிலை நிறுத்துவதாகும்.
  • இந்த எரிபொருள் செயல்திறன் மிக்கச் சுற்றுப்பாதையானது பூமி மற்றும் சந்திரனால் உருவாக்கப்படும் நடுநிலை வகை ஈர்ப்புப் புள்ளிகளில் உள்ள சாதக நிலையினைப் பயன்படுத்திக் கொள்கிறது.
  • NRHO அதிக நீள்வட்டமானது என்பதால் இந்த விண்வெளி நிலையம் ஆனது, நிலவினை நெருங்கும் போது தோராயமாக 1,865 மைல்கள் (3,000 கிலோமீட்டர்) தொலைவிலும், ஆனால் பின்னர் அது சுமார் 43,500 மைல்கள் (70,000 கிலோமீட்டர்) தொலைவு வரை பயணிக்கும்.
  • நான்கு விண்வெளி வீரர்கள் 90 நாட்கள் இந்த நிலையத்தில் தங்குவதற்கு ஏற்ற சில  சூழல்களை வழங்கும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்