TNPSC Thervupettagam

நிலவில் இரயில் பாதைகளை உருவாக்குதல்

May 10 , 2024 198 days 211 0
  • நாசா நடைமுறைக்கு எட்டாததாக கருதப்படும் திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது ஆனால் இது விரைவில் நிறைவு பெற்றால் விண்வெளியில் மனிதகுலத்தின் சாதனைகளை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.
  • இந்த 'இலட்சியமிகு' திட்டங்களில் திரவ அடிப்படையிலான தொலைநோக்கி, மனிதர்கள் மற்றும் சரக்குப் பொருட்களை செவ்வாய்க் கிரகத்திற்கு இடம் மாற்றச் செய்வதற்கான போக்குவரத்து அமைப்பு மற்றும் நிலவு இரயில் அமைப்பு ஆகியவை அடங்கும்.
  • இந்தத் திட்டங்கள் இன்னும் ஆய்வுக் கட்டத்தில் தான் உள்ளன என்ற நிலையில் இது வெற்றி பெறுவதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை.
  • FLUTE திட்டம் ஒரு பெரிய துளை அல்லது பிரிக்கப்படாத பிரதான திரவ கண்ணாடிகள் (பிரதிபலிப்பு திரவம்) கொண்ட விண்வெளி கண்காணிப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியமான தீர்வை வழங்குகிறது.
  • நுண் ஈர்ப்பு விசையில் திரவ வடிவமைப்பினை பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய பிரதான திரவ கண்ணாடிகள் விண்வெளியில் உருவாக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்