TNPSC Thervupettagam

நிலவில் உள்ள மண்ணின் தனிம மிகுதி அளவீடுகள்

September 1 , 2024 42 days 85 0
  • சந்திரயான்-3 விண்கலமானது, நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணின் முதல் இடம் சார்ந்த தனிம மிகுதி அளவீடுகளை வழங்கியுள்ளது.
  • இதற்காக பிரக்யான் உலாவிக் கலத்தில் உள்ள ஆல்பா துகள்கள் ஊடுகதிர் நிறமாலை அளவிகளின் (APXS) தரவுப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அளவீடுகள் ஆனது நிலவின் பாறைக் குழம்பு பெருங்கடல் (LMO) குறித்த ஒரு கருதுகோளை ஆதரிக்கின்றன.
  • இந்த கருதுகோள் ஆனது இலகுவான தாதுக்கள் மேற்பரப்பை நோக்கி மிதந்து தோன்றியதால் நிலவின் பிரதான கண்ட மேலோடு உருவானதாக குறிப்பிடுகிறது.
  • 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாறைக் குழம்புகளானது நிலவின் மேற்பரப்பை உருவாக்கியது என்ற கோட்பாட்டை இந்தக் கண்டுபிடிப்புகள் ஆமோதித்தன.
  • APXS என்பது அதிக அளவிலான மெக்னீசியம் நிறைந்த தாதுக்களையும் கண்டறிந்தது என்பதோடு இது நிலவின் ஆழமான அடுக்குகளின் பங்களிப்புகளையும் குறிக்கிறது.
  • சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு பெரிய விண்கல் விழுந்ததற்கான ஆதாரங்களையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த மோதல் ஆனது, 2,500 கிலோ மீட்டர் அளவு கொண்ட, சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய பள்ளங்களில் ஒன்றான தென் துருவ-எய்ட்கன் படுகையை உருவாக்கியதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்