TNPSC Thervupettagam
July 24 , 2024 40 days 183 0
  • நிலவில் ஒரு குகை கண்டுபிடிக்கப்பட்டதை அறிவியலாளர்கள் சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளனர்.
  • சீ ஆஃப் டிராங்குவிலிட்டி என்ற இருள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் குகை, 1969 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பல்லோ 11 கலம் தரையிறங்கிய தளத்திலிருந்து சுமார் 250 மைல்கள் (400 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.
  • சுமார் 100 மீட்டர் நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்ட இந்தக் குகை, நிலவின் மேற் பரப்பை நோக்கியவாறு ஒரு மேல் தள சாளரம் அளவிலான திறப்பைக் கொண்டு உள்ளது என்பதோடு இது நிலவின் அடிப்பரப்பு வரை நீளக்கூடும் என்றும் கருதப் படுகிறது.
  • இந்தக் குகையானது ஆழமானதாக இருந் தபோதிலும், அது சிறப்பு உபகரணங்கள் இல்லாமலேயே பூமியிலிருந்து காணும் வகையில் அமைந்துள்ளது.
  • பூமியை விட 150 மடங்கு வலிமையான சூரியக் கதிர்வீச்சுக்கு நிலவு உட்படுகிறது.
  • நிலவின் மேற்பரப்பு ஆனது பகலில் சுமார் 127 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அடைகிறது என்றும், இரவில் -173 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியடைகிறது என்றும் நாசா கூறுகிறது.
  • ஆனால் இக்குகையின் நிலையான சராசரி வெப்பநிலை சுமார் 17 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்