நிலவில் ஒரு குகை கண்டுபிடிக்கப்பட்டதை அறிவியலாளர்கள் சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளனர்.
சீ ஆஃப் டிராங்குவிலிட்டி என்ற இருள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்தக் குகை, 1969 ஆம் ஆண்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க அப்பல்லோ 11 கலம் தரையிறங்கிய தளத்திலிருந்து சுமார் 250 மைல்கள் (400 கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது.
சுமார் 100 மீட்டர் நீளம் கொண்டதாக மதிப்பிடப்பட்ட இந்தக் குகை, நிலவின் மேற் பரப்பை நோக்கியவாறு ஒரு மேல் தள சாளரம் அளவிலான திறப்பைக் கொண்டு உள்ளது என்பதோடு இது நிலவின் அடிப்பரப்பு வரை நீளக்கூடும் என்றும் கருதப் படுகிறது.
இந்தக் குகையானது ஆழமானதாக இருந் தபோதிலும், அது சிறப்பு உபகரணங்கள் இல்லாமலேயே பூமியிலிருந்து காணும் வகையில் அமைந்துள்ளது.
பூமியை விட 150 மடங்கு வலிமையான சூரியக் கதிர்வீச்சுக்கு நிலவு உட்படுகிறது.
நிலவின் மேற்பரப்பு ஆனது பகலில் சுமார் 127 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அடைகிறது என்றும், இரவில் -173 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியடைகிறது என்றும் நாசா கூறுகிறது.
ஆனால் இக்குகையின் நிலையான சராசரி வெப்பநிலை சுமார் 17 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.