TNPSC Thervupettagam
December 15 , 2023 346 days 195 0
  • நிலவில் சாலைகள் மற்றும் தரையிறங்கும் தளங்களை அமைப்பதற்கான மூலப் பொருளாக நிலவின் தூசிப் படலங்களைப் பயன்படுத்தலாம் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது பெரும்பான்மையாக அடர் சாம்பல் நிற நிலவு எரிமலைப் பாறையைக் கொண்டு உள்ளது.
  • அறிவியலாளர்கள் மாறுபட்ட வலிமை மற்றும் அளவுகள் கொண்ட லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி, தங்கள் சோதனைகளில் செறிவூட்டப்பட்ட சூரிய ஒளி படுமாறு தூண்டுவித்தனர்.
  • தூசுகளை உருக்கி முக்கோண, வெற்று மையம் கொண்ட ஓடுகளை வெற்றிகரமாக தயாரித்தனர்.
  • இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, நிலவில் சாலைகள் மற்றும் தரையிறங்கும் தளங்களை அமைப்பதற்கு திடமான மேற்பரப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப் படும்.
  • ஆனால் சுமார் 10 x 10 மீ அளவிலான தரையிறங்கும் தளத்தினை உருவாக்க சுமார் 100 நாட்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்