TNPSC Thervupettagam

நிலவில் தரையிறங்கிய ஜப்பான் விண்கலம்

January 28 , 2024 302 days 282 0
  • கடைசி நிமிட எந்திரக் கோளாறுகள் இருந்தபோதிலும், ஜப்பானின் "மூன் ஸ்னைப்பர்"  விண்கலம் நிலவில் துல்லியமாக தரையிறங்கியது.
  • இதன்மூலம், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நிலவில் மிதமான வேகத்தில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறியது.
  • நிலவை ஆய்வு செய்வதற்கான ஆளில்லாத, திறன் மிக்க தரையிறங்கு கலம் (SLIM) ஆனது "மூன் ஸ்னைப்பர்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • அதன் துல்லியமான தொழில்நுட்பம் காரணமாக, நிலவில் உள்ள ஒரு பள்ளத்தில் நிர்ணயிக்கப் பட்ட ஒரு குறிப்பிட்ட தரையிறங்கும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்குள் தரையிறங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வல்லுநர்கள் பல கிலோமீட்டர்கள் வரை நிர்ணயித்து வைத்திருக்கும் வழக்கமான தரையிறங்கும் மண்டல வரம்பை விட இது மிகவும் துல்லியமானது.
  • SLIM ஒரு துல்லியமான மிதவேக தரையிறக்கத்தில் வெற்றி பெற்றது.
  • தரையிறங்கிய இடமானது, இலக்குப் பகுதியில் இருந்து சுமார் 55 மீட்டர் தொலைவில் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்