நிலவில் புதிய வகை கனிமங்கள்
September 28 , 2022
792 days
454
- நிலவின் அருகாமைப் பகுதிகளில் இருந்து ஒரு புதிய வகைப் படிகத்தைச் சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் படிகத்திற்கு சீனாவின் சந்திரத் தெய்வமான சாங்கெ என்பதன் பெயரால் சாங்கேசைட்-(Y) என்று பெயரிடப்பட்டது.
- இந்த சிறிய மற்றும் வெளிப்படையான படிகமானது நிலவின் அருகில் உள்ள எரிமலைக் குப்பைகளுக்கு மத்தியில் காணப்பட்டது.
- இது ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதோடு அதன் அகலம் கிட்டத் தட்ட மனித முடியுடன் ஒப்பிடத்தக்கது ஆகும்.
- இது ஒரு தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளதோடு, இது சந்திர மேற்பரப்பில் அல்லது விண்கற்களில் மட்டுமே காணப்படும் பிற கனிமங்களுடன் தொடர்புடையது.
- 2020 ஆம் ஆண்டில் சாங்கே-5 ஆய்வுக் கலத்தின் மூலம் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட 1.8 கிமீ சந்திரப் பாறைகளில் இந்தப் படிகம் கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்த மாதிரிகள் 1976 ஆம் ஆண்டிற்குப் பிறகு நிலவில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட முதல் மற்றும் சீனாவால் சேகரிக்கப்பட்ட முதல் சந்திர மாதிரிகள் ஆகும்.
- சாங்கேசைட்-(Y) என்ற படிகமானது சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறாவது புதிய கனிமம் என்பதோடு இது சீனாவால் முதலில் அடையாளம் காணப்பட்ட படிகமாகும்.
- முந்தைய 5 கண்டுபிடிப்புகள் என்பவை அமெரிக்கா அல்லது ரஷ்யா ஆகியவற்றால் மேற்கொள்ளப் பட்டவையாகும்.
Post Views:
454