TNPSC Thervupettagam

நிலவில் மர்ம அதிர்வுகள்

September 17 , 2024 10 days 59 0
  • சந்திரயான்-3 கலமானது நிலவின் தென் துருவத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட நில அதிர்வு சமிக்ஞைகளைக் கண்டறிந்த முதல் நிலவு ஆய்வுக் கலமாகும்.
  • இந்த 250 நில அதிர்வு சமிக்ஞைகள் நிலவின் நடுக்கங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய 50 தனித்துவமான சமிக்ஞைகளை உள்ளடக்கியது.
  • நிலவில் அதிர்வு என்பது நிலவில் ஏற்படும் நிலநடுக்கத்தைக் குறிக்கிறது.
  • 250 நில அதிர்வு நிகழ்வுகளில், சுமார் 200 பிரக்யானின் அசைவுகள் அல்லது பிற கருவி செயல்பாடுகளுடன் தொடர்புடையவையாகும்.
  • நிலவு மேற்பரப்பின் தென் துருவத்திலிருந்து இந்த நில அதிர்வுத் தரவுகள் சேகரிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • அப்பல்லோ ஆய்வுத் திட்டத்திற்குப் பிறகு இது போன்றச் செயல்பாடு பதிவு செய்யப் படுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்