TNPSC Thervupettagam

நிலவுடைமைப் பாத்தியம் கோரல்

June 12 , 2023 407 days 224 0
  • கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவாஸ்தி தலைமையில் சட்ட ஆணையமானது அமைக்கப்பட்டது.
  • நிலவுடைமைப் பாத்தியம் கோரல் தொடர்பானச் சட்டத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று 22வது சட்ட ஆணையம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • நிலவுடைமைப் பாத்தியம் கோரல் என்ற கருத்தானது ஒரு நிலத்தினைக் காலியாக விடக் கூடாது என்றும் அதற்கு மாறாக ஒரு முறையானப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தாக்கத்தில் இருந்து தோன்றியது.
  • நிலவுடைமைப் பாத்தியம் கோரல் என்பது "தொடர்ச்சியான, தடையின்றி மற்றும் ஒரு அமைதியான முறையிலான" நில உரிமைதாரருக்கு எதிரான ஒரு உரிமைக் கோரலாக இருக்க வேண்டும்.
  • உள்நாட்டில் இந்த வரம்பு நிர்ணய சட்டத்தினைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியானது "1859 ஆம் ஆண்டு XIV சட்டம்" ஆகும்.
  • இது பிரிட்டிஷ் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உரிமையியல் சார்ந்த வழக்குகளின் வரம்பினை ஒழுங்குமுறைப் படுத்தியது.
  • 1963 ஆம் ஆண்டில் வரம்பு நிர்ணயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நிலவுடைமைப் பாத்தியம் கோரல் பற்றிய சட்டம் குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டது.
  • 1963 ஆம் ஆண்டு வரம்பு நிர்ணயச் சட்டத்தின் கீழ், 12 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிலம் அல்லது 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு நிலம் வைத்திருக்கும் எந்தவொரு நபரும் அந்தச் சொத்தின் உரிமையாளராக முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்