TNPSC Thervupettagam

நிலையான அரோரல் சிவப்பு வளைவு (SAR)

May 10 , 2023 567 days 265 0
  • இந்தியாவின் லடாக் பகுதியில் பொதுவாக துருவப் பகுதிகளில் காணப்படும் அரோரா பொரியாலிஸ் அல்லது வடக்கு விளக்குகள் காணப்பட்டது.
  • அரோராவைப் பகுப்பாய்வு செய்த பிறகு, அது “நிலையான அரோரல் சிவப்பு (SAR) வளைவு” என்று கணிக்கப்பட்டது..
  • வழக்கமாக நிகழும் அரோரா நிகழ்வு போன்று அல்லாமல் SAR என்பது லடாக்கில் நிகழும் மிகவும்  அரிதான ஒரு நிகழ்வு ஆகும்.
  • SAR ஆர்க் என்பது வானத்தில் காணப்படும் சிவப்பு நிற ஒளியின் பட்டையாகும்.
  • நகரும் வடிவங்களில் பல்வேறு வண்ணங்கள் தோன்றும் பல்வேறு அரோராக்கள் போலல்லாமல், (SAR) அரோராக்கள் காட்சிகள் நிலையான மற்றும் ஒரே வண்ணம் உடையதாக உள்ளது.
  • சூரியனில் இருந்து வெடித்த மின்னேற்ற அடைந்தப் பொருளால் தூண்டப்பட்ட, புவிக் காந்த அலையின்  செயல்பாட்டின் போது இது  தோன்றுகிறது.
  • ஆனால் இவற்றின் உருவாக்க வழிமுறை சற்று வித்தியாசமானதாக உள்ளது.
  • இந்த அலைகள் ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியாவின் லடாக் ஆகிய இடங்களில் காணப் பட்டன.
  • இது போன்ற நிகழ்வு கடந்த 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்