நிலையான கழிவு மேலாண்மை – சென்னை
June 15 , 2024
162 days
226
- நகரத்தில் நிலையான கழிவு மேலாண்மை நிலையினை அடைய சென்னை பெருநகர மாநகராட்சிக் கழகத்திற்கு (GCC) உலக வங்கி நிதியளிக்க உள்ளது.
- நகரத்திலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 20 ஆண்டுகளுக்குள் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கு உலக வங்கி திட்டமிட்டுள்ளது.
- நகரின் திடக்கழிவு மேலாண்மையின் நிலை குறித்தும் இது ஆய்வு மேற்கொள்ளும்.
- சென்னை பெருநகர மாநகராட்சிக் கழகமானது 2026-2027 ஆம் ஆண்டில் கொடுங்கையூரில் கழிவுகள் கொட்டப் படுவதை நிறுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Post Views:
226