TNPSC Thervupettagam

நிலையான நிதி: ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைத்தல்

October 18 , 2023 276 days 187 0
  • ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (ESCAP) புதிய அறிக்கையானது, கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தனியார் நிதியளிப்பு நிறுவனங்களுக்கான 10 நடவடிக்கை கொள்கைகளை முன்வைத்துள்ளது.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ள 51 ஆசிய-பசிபிக் நாடுகளில் 17 நாடுகள் மட்டுமே தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை பூர்த்தி செய்வதற்கான நிதித் தேவைகளை மதிப்பீடு செய்து அறிக்கை அளித்துள்ளன.
  • ஏழு நாடுகள் மட்டுமே ஏற்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் இடையேயான நிதி தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளன.
  • மிதமான பருவநிலை-மாற்றச் சூழ்நிலையில், பேரழிவு தொடர்பான மற்றும் பிற இயற்கை அபாயங்களால் இப்பகுதியில் ஏற்படும் சராசரிப் பொருளாதார இழப்புகள் 1.1 டிரில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதற்கும் மேற்பட்ட மோசமான சூழ்நிலையில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்