திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் சமீபத்தில் மேற்கு திரிபுராவில் உள்ள ஹாதிபாராவில் நிலையான நீர்ப்பிடிப்பு வன மேலாண்மைக்காக (Sustainable Catchment Forest Management - SCATFORM) ஒரு திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
இது 1000 கோடி ரூபாய் மதிப்புடைய திரிபுராவின் மையப்படுத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளை மேம்படுத்துவதற்காக 10 ஆண்டுகால அளவில் மேற்கொள்ளப்படும் ஒரு திட்டமாகும்.
இந்த திட்டத்திற்கு இந்திய அரசாலும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தாலும் (Japan International Cooperation Agency – JICA) இணைந்து நிதியளிக்கப்படுகின்றது.
80 சதவிகிதம் – ஜப்பான் மற்றும் 20 சதவிகிதம் – மத்திய, மாநில அரசுகள் (இந்தியா).
இத்திட்டத்தின் கீழ், திரிபுராவின் ஏழு மலைப்புற மாவட்டங்களில் மொத்தமாக 1447 தடுப்பணைகள் கட்டப்பட இருக்கின்றன.