TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு அறிக்கை 2024

June 23 , 2024 8 days 142 0
  • சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் வலை அமைப்பானது (SDSN) 9வது நிலையான மேம்பாட்டு அறிக்கையினை வெளியிட்டது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 16% SDG இலக்குகள் தான் நிறைவு செய்யப்படும் பாதையில் உள்ளது என்ற நிலையில் 84% இலக்குகள் வரையறுக்கப்பட்ட அல்லது தலைகீழான முன்னேற்றத்தையே கொண்டுள்ளன.
  • SDG இலக்குகளை அடைவதில் நோர்டிக் நாடுகள் முன்னணியில் உள்ளன என்ற நிலையில் பின்லாந்து (86.4) முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சுவீடன் (85.7), டென்மார்க் (85.0), ஜெர்மனி (83.4) மற்றும் பிரான்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • BRICS மற்றும் BRICS+ நாடுகள் 2015 ஆம் ஆண்டு முதல் SDG இலக்கு நிறைவில் சராசரியை விட விரைவான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன.
  • கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகள் 2015 ஆம் ஆண்டிலிருந்து SDG இலக்கு நிறைவில் அதிக முன்னேற்றத்தைக் கொண்டுள்ள பகுதிகளாகும்.
  • கீழ் மட்டத்தில் உள்ள 3 நாடுகள் தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு மற்றும் சாட் ஆகியனவாகும்.
  • இந்தியா 64.0 மதிப்பெண்களுடன் இதில் 109வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் 30% SDG இலக்குகள் மட்டுமே நிறைவு செய்யப்படும் பாதையில் உள்ளன அல்லது நிறைவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்