TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல் - போபால்

May 17 , 2023 430 days 232 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபால், ஐக்கிய நாடுகள் சபையின் கட்டாய நிலையான மேம்பாட்டு  இலக்குகளின் (SDG) உள்ளூர்மயமாக்கலை ஏற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக மாறியுள்ளது.
  • இந்த நகரமானது உள்ளாட்சி அமைப்புகளின் திறன் மற்றும் உறுதிப்பாடுகளை வெளிப் படுத்தும் தன்னார்வ உள்ளூர் மதிப்பாய்வுகளை (VLR) மேற்கொள்ளும்.
  • அந்த மாநில முதலமைச்சர் ‘நடவடிக்கைகளுக்கான செயல்பாட்டு நிரல்: நிலையான நகர்ப்புற மாற்றம்’ என்ற செயல்திட்டத்தினைப் போபால் நகரில் தொடங்கி வைத்தார்.
  • மக்கள், கிரகம் மற்றும் செழிப்புக்கானச் செயல்திட்டமாக 17 நிலையான மேம்பாட்டு இலக்குகள்  மற்றும் 169 இலக்குகளை உள்ளடக்கியச் செயல்பாட்டு நிரல் 2030 என்ற ஒரு செயல்திட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்