TNPSC Thervupettagam

நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீடு 2024 – இந்தியா

July 18 , 2024 131 days 304 0
  • நிதி ஆயோக் அமைப்பின் 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவின் நிலையான மேம்பாட்டு இலக்கு நிவர்த்திக் குறியீட்டில் உத்தரகாண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.
  • ஒட்டு மொத்தமாக 2020-21 ஆம் ஆண்டில் 66 ஆக இருந்த இந்தியாவின் SDG நிவர்த்திக் குறியீட்டு மதிப்பெண் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 71 புள்ளிகளாக உயர்ந்தது.
  • SDG நிவர்த்திக் குறியீட்டில் 57 புள்ளிகளுடன் பீகார் பின்தங்கிய நிலையில் உள்ளது என்ற நிலையில் 62 புள்ளிகளுடன் ஜார்க்கண்ட் அடுத்த இடத்தில் உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டின் மதிப்பெண்களுடன் ஒப்பிடும்போது பஞ்சாப், மணிப்பூர், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகியவற்றின் புள்ளிகள் அதிகபட்சமாக சுமார் 8 புள்ளிகள் அதிகரித்து முறையே 76, 72, 70 மற்றும் 65 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளன.
  • இந்திய மாநிலங்களில் நிலையான மேம்பாட்டு இலக்குகளில், "வறுமை ஒழிப்பு", "கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார மேம்பாடு" மற்றும் "புவியின் உயிரினங்கள்" ஆகியவற்றின் 2020-21 ஆம் ஆண்டு மதிப்பெண்களில் இருந்து அதிக பட்ச அதிகரிப்பானது பதிவாகியுள்ளது.
  • "பாலினச் சமத்துவம்" மற்றும் "அமைதி, நீதி மற்றும் வலுவான அரசு அமைப்புகள்" போன்ற இலக்குகளுக்கானப் புள்ளிகளில் சிறிய அளவிலான அதிகரிப்புகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், “ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்” என்ற ஒரே ஒரு குறிக்கோளின் புள்ளிகள் மட்டும் 2020-21 ஆம் ஆண்டில் இருந்த 67-இல் இருந்து 2022-23 ஆம் ஆண்டில் 65 ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்