ஆராய்ச்சியாளர்கள் மலிவான, பாதுகாப்பான மற்றும் நிலையான மின் கலன்களை உருவாக்க வழி வகுக்கும் வகையிலான இரும்பினால் ஆன எதிர் முனைப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
எளிதில் கிடைக்கப் பெறக் கூடிய மற்றும் மலிவான இரும்பினால் ஆன எதிர் முனைப் பொருளை உருவாக்கியுள்ளனர்.
வழக்கமான லித்தியம்-அயனி மின் கலன்கள் உற்பத்தியானது கோபால்ட் மற்றும் நிக்கல் உலோகங்களை அதிகம் சார்ந்துள்ளது என்பதோடு இவை விலையுயர்ந்தவை மற்றும் எளிதில் கிடைக்கப் பெறாதவையாக உள்ளன.
புதிய பொருள் கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற விலையுயர்ந்த மற்றும் அரிதான உலோகங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையை முடிவுக்குக் கொண்டு வரும்.
இது மலிவான விலையில் மின்சார வாகனங்கள் (EVs) உற்பத்திக்கு வழி வகுக்கும்.