பொருளாதாரத்திற்காக சில புதிய நிவாரண நடவடிக்கைகளை அரசு அறிவித்து உள்ளது.
இது கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டதற்குப் பிறகு அறிவிக்கப்பட்ட முதல் நிவாரண நடவடிக்கை ஆகும்.
கீழ்க்காணும் எட்டு நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி கடன் உறுதித் திட்டம்.
இதில் சுகாதாரத் துறைக்கு ரூ.50,000 கோடியும் சுற்றுலா உள்ளிட்டப் பிற துறைகளுக்கு ரூ.60,000 கோடியும் வழங்கப்படும்.
அவசர கால கடன் உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடி வழங்கப் படும்.
சிறு நிதியியல் நிறுவனங்களுக்கான கடன் உறுதித் திட்டம் (புதியத் திட்டம்)
இதற்கான கடன்தொகை வரம்பானது MCLR வட்டி வீதத்தில் (ஒரு வங்கிக்கான குறைந்த பட்ச கடன் வட்டி வீதம்) இருந்து கூடுதலாக 2% சதவீதத்துடன் ரூ. 1.25 லட்சமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
சுற்றுலா வழிகாட்டு நிறுவனம் மற்றும் பங்குதாரர்களுக்கான திட்டம்.
சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் ஒவ்வொன்றும் ரூ. 10 லட்சம் வரையிலும் சுற்றுலா வழிகாட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ரூ.1 லட்சம் வரையிலும் கடன் பெற இயலும்.
5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாதத்திற்கான இலவச நுழைவு இசைவுச் சீட்டு.
இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூ.100 கோடியாகும்.
இந்த வசதியானது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை அல்லது 5 லட்சம் நுழைவு இசைவுச் சீட்டுகள் வழங்கி முடிக்கப் படும் வரை நடப்பில் இருக்கும்.
ஆத்ம நிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம் – நீட்டிப்பு
இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான தேதியானது 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதியிலிருந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆக நீட்டிக்கப் பட்டுள்ளது.
DAP மற்றும் P&K வகை உரங்களுக்குக் கூடுதல் மானியங்கள் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளன.