TNPSC Thervupettagam

நிவேஷக் தீதி முன்னெடுப்பு - இரண்டாம் கட்டம்

April 21 , 2025 15 hrs 0 min 17 0
  • முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (IEPFA) மற்றும் இந்தியா அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி (IPPB) ஆகியவை "நிவேஷக் தீதி" முன்னெடுப்பின் இரண்டாம் கட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
  • இந்த உத்தி சார் ஒத்துழைப்பு ஆனது கிராமப்புறங்கள், பகுதியளவு நகர்ப்புற மற்றும் பின்தங்கிய (சேவைகள் எதுவும் சரியாக கிடைக்கப் பெறாத) பகுதிகளில் உள்ள பெண்களிடையே அடிமட்டப் பிரச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த கல்வியளிப்பு மூலம் நிதி சார் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • "நிவேஷக் தீதி" என்பது மகளிர் அஞ்சல் ஊழியர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அவர்களின் உள்ளூர்ப் பிராந்தியங்களுக்குள் நிதியியல் ரீதியான கல்வியாளர்களாகச் செயல்படுவதற்குப் பயிற்சி அளிக்கும் ஒரு தனித்துவமான முன்னெடுப்பாகும்.
  • இதன் முதல் கட்டத் திட்டத்தின் போது, ​​இந்தியா முழுவதும் IPPB வங்கி நடத்திய நிதி சார் கல்வியறிவு முகாம்களில் 55,000க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்