October 11 , 2024
77 days
119
- அமேசான் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான நீக்ரோ நதியின் நீர்மட்டம் ஆனது இதுவரை பதிவு செய்யப்படாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது.
- மனௌஸ் என்ற துறைமுகத்தில் நீக்ரோ ஆற்றின் நதியின் நீர்மட்டம் சமீபத்தில் 12.66 மீட்டராக இருந்தது.
- இதன் சாதாரண நீர் மட்டம் சுமார் 21 மீட்டர் ஆகும்.
- சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைவான பதிவு இதுவாகும்.
- நீக்ரோ நதி அமேசான் படுகையின் 10 சதவீதப் பகுதிகளுக்கு நீர் வழங்குகிறது, மேலும் நீர் கொள்ளளவின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய நதியாகும்.
- 2250 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதி கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசில் வழியாகச் செல்கிறது.
Post Views:
119