TNPSC Thervupettagam

நீக்ரோ நதி நீர்மட்டம்

October 11 , 2024 43 days 83 0
  • அமேசான் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான நீக்ரோ நதியின் நீர்மட்டம் ஆனது இதுவரை பதிவு செய்யப்படாத அளவிற்கு மிகவும்  குறைந்துள்ளது.
  • மனௌஸ் என்ற துறைமுகத்தில் நீக்ரோ ஆற்றின் நதியின் நீர்மட்டம் சமீபத்தில் 12.66 மீட்டராக இருந்தது.
  • இதன் சாதாரண நீர் மட்டம் சுமார் 21 மீட்டர் ஆகும்.
  • சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைவான பதிவு இதுவாகும்.
  • நீக்ரோ நதி அமேசான் படுகையின் 10 சதவீதப் பகுதிகளுக்கு நீர் வழங்குகிறது, மேலும் நீர் கொள்ளளவின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய நதியாகும்.
  • 2250 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதி கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசில் வழியாகச் செல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்