4-வது நீடித்த இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.
இம்மாநாடு பொலிவுறு நகரத் திட்டம், மத்திய அரசாங்கம், சுவச் பாரத், கர்நாடகா நகர கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் கர்நாடக நகர மேலாளர் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்டது.
இம்மாநாட்டில் இந்திய பொலிவுறு நகர திட்டங்கள் மீதான நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள், வளர்ச்சி மற்றும் தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும் இது நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பத்தின் கூட்டுச் செயல்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தியது.