நீடித்த உயிரி எரிபொருள் மீதான சர்வதேச கருத்தரங்கு 2018
March 1 , 2018 2463 days 721 0
புதுதில்லியில் நீடித்த உயிரி எரிபொருள் (Biofuel) மீதான இரு நாள் சர்வதேச கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை மற்றும் உயிர் எதிர்கால மேடை (Bio Future Platform) அமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து இக்கருத்தரங்கை நடத்தியுள்ளன.
நவீன உயிரி எரிபொருட்களை மேம்படுத்துவதற்கும், வணிகமயப்படுத்துவதற்கும் (Commercialization) உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உயிரி எரிபொருள் துறைசார் நிபுணர்கள் தங்களது அனுபவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை இந்தியாவில் “புத்தாக்கத் திட்டத்தின்” (Mission Innovation – MI) செயல்பாடுகளை வழிநடத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் முதன்மை நிறுவனமாகும்.
புதுதில்லியில் உள்ள மரபுப்பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலுக்கான சர்வதேச மையத்தில் (ICGEB – International Center For Genetic Engineering and Biotechnology) உயிரி தொழில்நுட்பத்துறையால் 2014 ஆம் ஆண்டு “புத்தாக்க இந்தியா திட்டத்திற்கான” நிறுவன அமைப்புகள் அமைக்கப்பட்டன.
நவீன உயிரி எரிபொருள் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் குறைந்த விலையிலான புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.