TNPSC Thervupettagam

நீடித்த மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பிற்கான பிரகடனம்

February 15 , 2021 1344 days 528 0
  • மீன்வளக் குழுவை (Committee on Fisheries-COFI) சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட 34வது அமர்வானது நீடித்த மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பிற்கான முதலாவது பிரகடனத்திற்கு ஆதரவளித்துள்ளது.
  • COFI-34 என்பது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (UNFAO) மீன் வளக் குழுவின் 34வது அமர்வாகும்.
  • இந்தப் பிரகடனமானது சட்ட விரோத, பதிவு செய்யப்படாத  மற்றும் ஒழுங்குபடுத்தப் படாத மீன் பிடிப்பைத் தடுப்பதற்கான ஒரு வலுவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கின்றது.
  • மேலும் இது கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கங்களிலிருந்து மீண்டு வருவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்துகின்றது.
  • COFI-34 ஆனது 1995 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறுப்புமிக்க மீன் பிடிப்பிற்கான நடத்தை விதிகளின் 25வது நினைவு ஆண்டைக் குறிக்கின்றது.
  • இந்த விதியானது உலகம் முழுவதும் நீடித்த மீன்வளம் மற்றும் மீன் பிடிப்பை நோக்கிய ஒரு முக்கிய வழிகாட்டுக் கூறாகச் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்