TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2018 அறிக்கை

June 26 , 2018 2344 days 696 0
  • ஐ.நா. அமைப்பின் 2018-ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கையின் படி, (Sustainable Development Goals report) குறிப்பிடத்தகுந்த வகையில் ஓர் தசாப்தத்திற்கும் (Decade) மேலான காலத்தில் உலகில் பட்டினியுடைய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • உலகில் தற்சமயம் தோராயமாக 38 மில்லியனிற்கும் அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுடைய மக்கள் (Undernourished people) உள்ளனர். இவர்களின் எண்ணிக்கையானது 2015-ஆம் ஆண்டின் 777 மில்லியன் என்ற அளவிலிருந்து 2016-ஆம் ஆண்டு 815 மில்லியன் எனும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • இந்த அறிக்கையானது போர்கள், மோதல்கள், வறட்சி, பருவநிலை மாறுபாடோடு தொடர்புடைய பேரிடர்கள் ஆகியவை உலகில் வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்துகின்ற முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என கூறுகின்றது.
  • இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளைக் கொண்ட தெற்காசிய பிராந்தியமானது, குழந்தை திருமணங்கள் விகிதத்தில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. மேலும் 2000-ஆம் ஆண்டு முதல் 2017 -ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து வைக்கப்படுகின்ற பெண் குழந்தைகளுக்கான ஆபத்துகள் 40 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளது.

  • மறுபுறம் தெற்காசியப் பிராந்தியத்தின் பல நாடுகளில் 70 சதவீதத்திற்கும் மேலாகத் தண்ணீர் பற்றாக்குறை நிலை (Water stress level) காணப்படுகின்றது. இது வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிற தண்ணீர்ப் பற்றாக்குறை நிலையை அடையாளப்படுத்திக் காட்டுகின்றது.
  • இந்த அறிக்கையானது 17 குறிக்கோள்களையும், 169 இலக்குகளையும் கொண்ட, நீடித்த வளர்ச்சிக்கான, 2030-ஆம் ஆண்டு அடைவதற்கு இலக்கிட்டுள்ள வளர்ச்சி நிரல்களின் அடைவினை நோக்கிய முன்னேற்றங்களின் கண்ணோட்டமாகும்.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளானது 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி ஐ.நா. நீடித்த வளர்ச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்