TNPSC Thervupettagam

நீட் தேர்விற்கு எதிரான மசோதா - தமிழக சட்டசபை மீண்டும் நிறைவேற்றம்

February 10 , 2022 894 days 498 0
  • தமிழக சட்டசபையானது, பிப்ரவரி 8 ஆம் தேதியன்று, ஆளுநர் R.N.ரவி அவர்களால் திருப்பி அனுப்பப் பட்ட  நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்விற்கு எதிரான மசோதாவை ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றி வரலாறு படைத்தது.
  • ஆளுநர் R.N.ரவி அவர்கள் சமீபத்தில், “தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதாவை” சட்டசபைக்குத் திருப்பி அனுப்பியிருந்தார்.
  • இது மோசமான (ஏழ்மையான) பொருளாதாரப் பின்னணியில் உள்ள மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்று அவர் கூறினார்.
  • தமிழக சட்டசபையானது, தனது 70 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக,  திருப்பி அனுப்பப்பட்ட ஒரு மசோதாவின் அதே வரைவு மசோதாவை திருத்தங்கள் இல்லாமல் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றியுள்ளது.
  • தற்போது மீண்டும் அதே மசோதாவினை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளதால், தமிழக ஆளுநர் இரண்டாவது முறையாக இந்த மசோதாவினை நிராகரிக்க முடியாது.
  • ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியாக வேண்டும்.
  • இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்