TNPSC Thervupettagam

நீண்ட அலகு கொண்ட கழுகுகளின் கூடுகள் 2024

October 22 , 2024 4 days 75 0
  • 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மிக அருகிய நிலையில் உள்ள நீண்ட அலகு கொண்ட கழுகுகளின் (ஜிப்ஸ் இண்டிகஸ்) எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
  • முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் (MTR) இந்த இனங்களின் 74% இனப்பெருக்க வெற்றி விகிதம் பதிவாகியுள்ளது.
  • அதே காலக் கட்டத்திற்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 31 இணை கழுகுகளில், 23 வெற்றிகரமாக குஞ்சு பொரிக்கப்பட்டுள்ளன.
  • நீண்ட அலகு கொண்ட கழுகு ஆனது இந்தியக் கழுகு என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது 2016 ஆம் ஆண்டில் 13 கழுகுகள் பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 28 ஆக அதிகரித்துள்ளது.
  • இது ஐந்தாண்டுகளில் சுமார் 115% அதிகரிப்பினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்