2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் மிக அருகிய நிலையில் உள்ள நீண்ட அலகு கொண்ட கழுகுகளின் (ஜிப்ஸ் இண்டிகஸ்) எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் (MTR) இந்த இனங்களின் 74% இனப்பெருக்க வெற்றி விகிதம் பதிவாகியுள்ளது.
அதே காலக் கட்டத்திற்கு இடையில் பதிவு செய்யப்பட்ட 31 இணை கழுகுகளில், 23 வெற்றிகரமாக குஞ்சு பொரிக்கப்பட்டுள்ளன.
நீண்ட அலகு கொண்ட கழுகு ஆனது இந்தியக் கழுகு என்றும் அழைக்கப்படுகிறது.
இது 2016 ஆம் ஆண்டில் 13 கழுகுகள் பதிவு செய்யப்பட்டது என்ற நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் சுமார் 28 ஆக அதிகரித்துள்ளது.
இது ஐந்தாண்டுகளில் சுமார் 115% அதிகரிப்பினைக் குறிக்கிறது.