இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது, நீண்ட ஆயுள் கொண்ட இந்தியா என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்தது.
இது மனிதரின் ஆரோக்கியமான வாழ்நாளினை அதிகரிப்பதையும், முதுமை தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்மையாக ஆரம்பகால நோய் குறிகாட்டிகளைக் கண்டறிதல், வயது முதிர்வின் உயிரி குறிகாட்டிகள் குறித்து ஆராய்தல் மற்றும் ஆரோக்கியமான வயது முதிர்விற்கு உதவுவதற்காக புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.