ஒடிசாவின் நவீன் பட்நாயக் நாட்டிலேயே நீண்ட காலம் பணியாற்றிய இரண்டாவது முதலமைச்சர் ஆவார்.
2000 ஆம் ஆண்டு மார்ச் 05 ஆம் தேதியன்று பொறுப்பேற்ற இவர் 23 ஆண்டுகள் 138 நாட்களாக இந்தப் பதவியில் இருகிறார்.
இவர் மேற்கு வங்காளத்தின் ஜோதி பாசுவின் சாதனையினை முறியடித்துள்ளார்.
ஜோதிபாசு மேற்கு வங்காளத்தின் முதல்வராக 1977 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி முதல் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 05 ஆம் தேதி வரை 23 ஆண்டுகள் 137 நாட்கள் இந்தப் பதவியினை வகித்தார்.
சிக்கிம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங் நாட்டிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை இன்றும் தன் வசம் கொண்டுள்ளார்.
இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 2019 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி வரை 24 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இமயமலைப் பகுதி மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்தார்.