TNPSC Thervupettagam

நீண்ட தங்க நிற வால் உடைய குரங்க வகை (கோல்டன் லங்கூர்) பாதுகாப்பு இனவிருத்தித் திட்டம் - அசாம்

February 2 , 2019 1996 days 581 0
  • அசாம் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா அம்மாநிலத்தில் கோல்டன் லங்கூர் பாதுகாப்பு இனவிருத்தித் திட்டத்தின் வெற்றியை அறிவித்தார்.
  • இத்திட்டத்தின் நோக்கம் தற்சமயம் அருகிவரும் நிலையில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வினத்தின் இனவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அடர் வனங்களில் தாமாகவே தமது இனவிருத்தியை அவை மேற்கொள்ள இயலச் செய்வதாகும்.
  • 1953 ஆம் ஆண்டில் இயற்கையாளர் P. ஜீ என்பவரால் கோல்டன் லங்கூர் (டிராகிபிக்தீகஸ் ஜீ) கண்டறியப்பட்டது.
  • இந்த லங்கூர் இனங்கள் மரங்களின் இலைகளை உண்ணும் குரங்கு வகைகளாகும்.
  • இவை பிரதானமாக மானஸ் அசாமின் காடுகளிலும் முக்கியமாக உயிர்க்கோள மையத்தின் பகுதிகளிலும் பூடானிலும் மட்டுமே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்