TNPSC Thervupettagam

நீண்ட வால் கொண்ட மற்றும் மீன் உண்ணும் ஐரோப்பிய வாத்துகள்

April 10 , 2023 467 days 217 0
  • அரிய நீண்ட வால் கொண்ட வாத்து இனமானது, காஷ்மீரில் உள்ள வுலார் ஏரியில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த வாத்துகள் கடைசியாக 1939 ஆம் ஆண்டில் F லுட்லோ என்பவரால் ஹோகர்சர் எனுமிடத்தில் கண்டறியப் பட்டன.
  • இவை மெல்லிய, நீண்ட வால் கொண்ட வண்ணமயமான கடல் வாத்து இனங்கள் ஆகும்.
  • இவை அடிக்கடி நெருக்கமான திரள் கூட்டங்களை உருவாக்கி விரைவாகவும் தாழ்வாகவும் மாறி மாறி பறக்கக் கூடியவை ஆகும்.
  • நீண்ட வால் கொண்ட இந்த வாத்துகள் அலாஸ்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் வழியில் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு வந்து போகின்றன.
  • ஸ்மியூ (மார்கெல்லஸ் அல்பெல்லஸ்) என்பது அனாடிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர அளவிலான வாத்துகளாகும்.
  • ஸ்மியூ என்பது யூரேசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டு பகுதிகளிலும் காணப் படும் ஓர் இனமாகும்.
  • இவை இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் அரிதாகவே வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்