TNPSC Thervupettagam

நீதி தேவதையின் சிலை

October 25 , 2024 36 days 176 0
  • உச்சநீதிமன்றம் ஆனது, சமீபத்தில் கண்கள் கட்டப்படாத "நீதி தேவதை" சிலையை திறந்து வைத்துள்ளது.
  • கண்ணைக் கட்டியிருந்த பழைய உருவமானது நீதியின் பாரபட்சமற்றத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
  • இது ஒரு கையில் துலாக்கோலையும், தனது மறுகையில் வாளுக்குப் பதிலாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினையும் கொண்டுள்ளது.
  • கட்டப்படாத கண்களுடன் கூடிய இந்தப் புதிய சிலையானது “சட்டம் குருடானது அல்ல; அது அனைவரையும் சமமாக கருதுகிறது என்பதைக் குறிக்கிறது.
  • டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியின் ஓவியரான வினோத் கோஸ்வாமி இதனை வடிவமைத்துள்ளார்.
  • நீதி தேவதையின் உருவம் ஆனது, கிரேக்க மற்றும் ரோமானிய புராணங்களில் இருந்து பெறப்பட்டதாக அறியப்படுகிறது.
  • முதல் ரோமானியப் பேரரசர் அகஸ்டஸ் (கி.மு. 27-கி.பி. 14), ஜஸ்டிடியா (அல்லது இயுஸ்டிடியா) என்றழைக்கப்படும் ஒரு தெய்வத்தின் வடிவத்தில் நீதி வழிபாட்டை அறிமுகப் படுத்தினார்.
  • 1872 ஆம் ஆண்டில் கட்டமைக்கப் பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில், அதன் கட்டிடத்தைத் தாங்கும் தூண்களில் நீதி தேவதையின் உருவங்கள் முதன்முதலில் செதுக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்